றியாத்: சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளின்படி, புகைபிடிப்பவர்கள் இனிமேல் தங்கள் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை கொடுக்கவேண்டும் ‘பாவத்திற்கான வரி’ என்று கூறப்படும் இந்த வரி, சிகரெட்டுகளுக்கு மட்டுமல்ல, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களுக்கும் பொருந்தும்.
கச்சா எண்ணெய் விற்பனை வருவாய் குறைவை ஈடுகட்டுவதற்கான இந்த வரி விதிப்பு, சவுதி அரேபியாவில் மட்டுமல்ல, வளைகுடா நாடுகள் அனைத்திலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
பல தசாப்தங்களாக வரியில்லா அமைப்பு மற்றும் அரசாங்கத்தின் பெரிய அளவிலான மானியங்களாலும் சவுதி அரேபிய மக்கள் பயனடைந்துள்ளனர்.வரி காரணமாக விலை இருமடங்காக அதிகரிக்க இருப்பதால், பெருமளவு இலாபம் ஈட்டுவதற்காக பல வர்த்தகர்கள் சிகெரெட்டுகளை பதுக்கி வைக்கத் தொடங்கியிருப்பதாக சவுதி அரேபியாவின் உள்ளூர் ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.
Published by
றியாத்: சவுதி அரேபியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளின்படி, புகைபிடிப்பவர்கள் இனிமேல் தங்கள் சிகரெட்டிற்கு இருமடங்கு விலை கொடுக்கவேண்டும் ‘பாவத்திற்கான வரி’ என்று கூறப்படும் இந்த வரி, சிகரெட்டுகளுக்கு மட்டுமல்ல, கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்களுக்கும் பொருந்தும்.
Leave a comment