மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தாக்குதலும், கொல்லப்பட்ட 700க்கும் அதிகமான அதிகாரிகளும்…

  • MJ

police11-06-1990. தமிழீழ விடுதலைப் புலிகளின் தையல் காரராக இருந்த முஸ்லிம் ஒருவரை, பொலிஸார் கைது செய்து வைத்திருந்தனர். அவரை விடுதலை செய்வதற்காகச் சென்ற விடுதலைப் புலிகள், தனது உறுப்பினரை பொலிஸார் விடுதலை செய்யாததால், மட்டு பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த இரு தமிழ் பொலிஸ் அதிகாரிகளை விடுதலை புலிகள் கடத்திச் சென்றனர்.

காலை 6 மணி. 250க்கும் அதிகமான விடுதலைப் புலிகளின் சுற்றிவளைப்பில் சிக்குண்ட மட்டக்களப்பு பொலிஸ் நிலையம், அங்கிருந்த பொலிஸார், அவர்களது குடும்பத்தினர், அதிகாரிகள் என புலிகளால் கடத்திச் செல்லப்பட்டனர்.

பொலிஸ் நிலையம் முற்றாக சூரையாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட பொலிஸ் நிலையங்கள் தாக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு பொலிஸ் நிலைய முற்றுகையுடன் விடுதலைப் புலிகளின் இரண்டாவது ஈழப்போர் ஆரம்பமானது.

1990 ஜூன் மாதம் 11 மற்றும் 12ம் திகதிகளில் மாத்திரம் புலிகள் மேற்கொண்ட கிழக்கு மாகாண பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் மாத்திரம் 700க்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் கொல்லப்பட்டவர்களுள் அதிகமானவர்கள் முஸ்லிம் பொலிஸ் அதிகாரிகளாவர்.

police

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத் தாக்குதல் சம்பந்தமான சுவாரஸ்யமான தகவல்களுடன் விரிவான கட்டுரையை வாசகர்களுடன் பகிரலாம் என்றே நினைத்திருந்தேன். எனினும் சங்கைமிக்க நோன்பு அதற்கு இடம் அளிக்கவில்லை.

இன்ஸா அல்லாஹ் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்றைய தினம் கொல்லப்பட்ட, ஸஹீதான அனைத்து அதிகாரிகளையும் இந்நேரத்தில் நினைவுகூறுகின்றோம் யுவர்காத்தான்குடியுடன்…

நன்றி

  • MJ

Published by

Leave a comment