இலங்கை மட்டைவீச்சாளர்களின் அதிரடியில் வீழ்ந்தது இந்தியா

லண்டன்: சம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில்,  வியாழக்கிழமையன்று லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கை இடையே நடந்த போட்டியில் 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை வென்றது. 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தனது துடுப்பாட்டத்தைத் தொடங்கிய இலங்கை அணி, முதல் விக்கெட்டை 5-ஆவது ஓவரில் பறிகொடுத்தாலும், மெண்டிஸ் மற்றும் குணதிலக ஆகிய இரு இலங்கை வீரர்களும் நன்கு அடித்து விளையாடினர்.

மெண்டிஸ் 89 ரன்களையும், குணதிலக 76 ரன்களையும் குவித்தனர். இருவரும் பின்னர் ஆட்டமிழந்த போதிலும், அரைச்சதம் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்த இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

48.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 322 ரன்களை பெற்ற இலங்கை அணி 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

Published by

Leave a comment