கொழும்பு: நாட்டின் பல மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100 மில்லிமீற்றர் வரையிலான அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணித்தியாலம் தொடர்பில் திணைக்களத்தின் வானிலை நிபுணர் நதீகா ரணவீர கருத்து வெளியிட்டார்.
மேல், வடமேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யும். விசேடமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா, இரத்தினபுரி, குருநாகல் மற்றும் கேகாலை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான அடைமழையை எதிர்பார்க்க முடியும்.
கிழக்கு, ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், அதேபோல் வவுனியாவிலும் சில பகுதிகளில் மாலை நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மழை பெய்யும் போது நாட்டின் ஊடாக 50 கிலோமீற்றர் வேகத்தில் கடும் காற்று வீசக்கூடும். அத்துடன் மழையினால் ஏற்படும் அனர்த்தங்களில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Published by
கொழும்பு: நாட்டின் பல மாவட்டங்களில் எதிர்வரும் 24 மணித்தியாளங்களுக்குள் 100 மில்லிமீற்றர் வரையிலான அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 24 மணித்தியாலம் தொடர்பில் திணைக்களத்தின் வானிலை நிபுணர் நதீகா ரணவீர கருத்து வெளியிட்டார்.
Leave a comment