ஹெலிகொப்டரில் குழந்தை பெற்றெடுத்த பெண்

floods heli babyஇரத்தினபுரி: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப்பெண் ஒருவருக்கு, விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் சுகப் பிரசவம் நடைபெற்றது. திங்கட்கிழமை (29) கலவான அரசாங்க வைத்தியசாலையிலிருந்து இரத்தினபுரி பிரதான வைத்தியசாலைக்கு ஹெலிகொப்டரில் அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த வேளை தனது குழந்தையை பிரசவித்துள்ளார்.

தாயும் குழந்தையும் இரத்தினபுரி பிரதான வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

floods heli baby

இதே வேளை அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் திங்கட்கிழமை (29)நண்பகல் வெளியிட்டுள்ள தகவலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி உயிழந்தவர்களின் எண்ணிக்கை 169 ஆக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 102 ஆக குறைந்துள்ளதாகவும் காயமுற்றோரின் எண்ணிக்கை 88 என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிந்திய இணைப்பு:

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டரில்  பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. குறிப்பிட்ட திகதிக்கு முன்னரே குழந்தை பிறந்தமையே இந்த உயிரிழப்பிற்கு காரணம் என இரத்தினபுரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவானை பகுதியிலிருந்து இரத்தினபுரிக்கு இன்று அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு உலங்குவானூர்தியில் பறக்கும் போதே குழந்தை பிறந்திருந்தது. எனினும் குறித்த குழந்தையை பிரசவித்த தாய் நலமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published by

Leave a comment