மல்வான ரக்ஸபான ஜும்ஆ மஸ்ஜித் விடுக்கும் அவசர வேண்டுகோள்

malwana.jpg 1சுமார் 1700 பேரை உள்ளடக்கிய எமது ஊர் வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 6 அடி உயரத்திற்கு ஊரைச் சுற்றி ஆற்று நீர் பாய்வதால் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரமின்மையால் வெளியுலகத் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 70 இற்கு மேற்பட்ட வீடுகளும் 40 இற்கு மேற்பட்ட வியாபார ஸ்தலங்களும் நீரில் மூழ்கியுள்ள நிலையில் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன.

மக்கள் தற்காலிக இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

எமது ரக்ஸபான பள்ளிவாசலை மையமாக வைத்து சுமார் 1700 பேருக்கு ஸஹர் உணவு உட்பட நிவாரணப் பணிகள் சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெறுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை அத்தியவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள் வழங்குதல், துப்பரவு செய்து மீள்குடியேற்றச் செய்தல் என்பவற்றுக்கு பாரிய உதவிகள் தேவைப்படுகின்றன.

malwana.jpg 1
ஆவனப்படம்

எனவே, புனித ரமழானில் சிரமத்துடன் நோன்பு நோற்றிருக்கும் உங்கள் சகோதரர்களுக்கு உதவிக் கரம் நீட்டி, பன்மடங்கு நன்மைகளைப் பெற்றுக்கொ்ள முன்வருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு

சகோதர் பியாஸ் – 0772482594

சகோதரர் இஜ்லான் ஆசிரியர் – 0773531376

சகோதரர் நிஷவ்ஸ் – 0714922490

Bank Detail:

Raxapana Jummaa Mosque

People’s Bank (Malwana Branch)

A/c No 191100104688107

Swift Code -PSBKLKLX

Published by

Leave a comment