கொழும்பு: வெள்ளவத்தை, சவோய் திரையரங்கின் அருகில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள் தேசிய மற்றும் களுபோவில வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையிலேயே கட்டிடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Published by
கொழும்பு: வெள்ளவத்தை, சவோய் திரையரங்கின் அருகில் உள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலர் காயமடைந்துள்ளனர். ஐந்து மாடிகளைக் கொண்ட கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Leave a comment