SAITM எதிர் ஆர்ப்பாட்டம்; பல்கலை மாணவர்கள் மீது கண்ணீப்புகை

SAITM-01கொழும்பு: நீதிமன்ற தடை உத்தரவை மீறி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் SAITM தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிராக, ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில், ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லும் பாதையான கொழும்பு – கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்தில் இருந்து காலி முகத்திடலுக்கு நுழையும் பாதை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாலபே மருத்துவக் கல்லூரியை மூடுதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, இன்றும் (17) நாளையும் (18) ஆர்ப்பாட்ட பேரணிகளை முன்னெடுக்கவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (17) காலை 11.00 மணியளவில் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்னால் குறித்த இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பிக்கப்பட்டதோடு, அதனையடுத்து ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்லும் லோட்டஸ் வீதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SAITM-01

மாணவர்களின் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்தினால் உரிய தீர்வு வழங்கப்படும் வரை, தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும், தடையுத்தரவை பிறப்பித்து மாணவர்களின் எதிர்ப்பை ஒருபோதும் தடுக்க முடியாது என அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் தலைவர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.

மாலபே, சைட்டம் தனியார் வைத்திய கல்லூரியை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்த்துக் கொள்வது மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்னிறுத்தியே இந்த நடவடிக்கையை அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணியின் மீது, நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு கோட்டையில் ஆரம்பமான குறித்த மாணவர் பேரணி, கொழும்பு நகர மண்டபத்திற்கு (விகாரமாதேவி பூங்காவிற்கு) அருகிலுள்ள வீதியை மறித்ததை அடுத்து, அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது.

இதனையடுத்து, பேரணியைக் கலைக்கும் நோக்கில் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல்களை பொலிசார் மேற்கொண்டனர்.

Published by

Leave a comment