டப்ளின்: மகளிருக்கான QUADRANGULAR கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8-வது போட்டியில் அயர்லாந்து அணியும், இந்திய அணியும் மோதின. அதன் படி நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர்களாக இந்திய அணிக்கு டீப்டி சர்மா-பூனம் ரவுட் களமிறங்கினர்.இவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டிற்கு 320 ஓட்டங்கள் குவித்தனர். பூனம் ரவுட் சதம் கடந்து 188 ஓட்டங்களும், டீப்டி சர்மா சதம் கடந்து 109 ஓட்டங்களும் குவித்தார்.
இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 358 ஓட்டங்கள் குவித்தது.அடுத்து ஆடிய அயர்லாந்து அணி 40 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ஓட்டங்கள் எடுத்து 249 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
துவக்க விக்கெட்டிற்கு 320 ஓட்டங்கள் குவித்த இந்திய மகளிர் அணி, ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் உபுல் தரங்க மற்றும் சனத் ஜெயசூர்யா பெற்ற 286 ஓட்டங்களை முறியடித்துள்ளனர்.
2006 இல் , இங்கிலாந்து- லீட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்திற்கு எதிரான 5வது ஒருநாள் சர்வதேசப் போட்டியிலேயே ஜயசூர்யவும், தரங்கவும் இணைந்து பெற்றிருந்தனர்.
இவர்களின் இந்த சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Published by
டப்ளின்: மகளிருக்கான QUADRANGULAR கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 8-வது போட்டியில் அயர்லாந்து அணியும், இந்திய அணியும் மோதின. அதன் படி நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர்களாக இந்திய அணிக்கு டீப்டி சர்மா-பூனம் ரவுட் களமிறங்கினர்.இவர்கள் இருவரும் ஆரம்ப விக்கெட்டிற்கு 320 ஓட்டங்கள் குவித்தனர். பூனம் ரவுட் சதம் கடந்து 188 ஓட்டங்களும், டீப்டி சர்மா சதம் கடந்து 109 ஓட்டங்களும் குவித்தார்.
Leave a comment