கொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக கறுப்புப் பூனை கொமாண்டோ படையினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையை இந்திய பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக இந்திய விமான படையின் எம்.ஐ.17 உலங்கு வானூர்திகள் இரண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக 600 பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, நாளை இந்தியா நோக்கி செல்லவுள்ளார். இந்திய பிரதமர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேசவுள்ளார்.

கொழும்பு: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்காக கறுப்புப் பூனை கொமாண்டோ படையினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். ஹட்டன் டிக்கோயா வைத்தியசாலையை இந்திய பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இதற்காக இந்திய விமான படையின் எம்.ஐ.17 உலங்கு வானூர்திகள் இரண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Leave a comment