இலங்கை அணியின் பயிற்சியாளராக அலன் டொனால்ட் நியமனம்

allan donaldகொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணிக்கு தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் அலன் டொனால்ட் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கபட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்றும் சம்பியன்ஸ் கோப்பையில் பங்கேற்று விளையாடவுள்ளது.அந்த தொடருக்கான தற்காலிக பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் அலன் டொனால்ட் (50) நியமிக்கபட்டுள்ளார்.

இரண்டு மாதங்களுக்கு மட்டுமே இவர் பயிற்சியாளராக செயல்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. வரும் 9 திகதியிலிருந்து பல்லேகல சர்வதேச மைதானத்தில் தொடங்கும் சிறப்பு பயிற்சியில் டொனால்டு கலந்து கொள்ளவுள்ளார்.

allan donald

மேலும், இலங்கை அணியின் முன்னாள் வீரர்களும், பந்து வீச்சு பயிற்சியாளர்களுமான சமிந்த வாஸ், நுவான் சொய்ஸா, ராமநாயக்கா, ரவீந்தர புஷ்பகுமாரா ஆகியோருக்கும் அலன் டொனால்ட் சிறப்பு பயிற்சி கொடுப்பார் என தெரிகிறது.

Published by

Leave a comment