வோஷிங்டன் DC: அணு ஆயுதங்களை கொரிய பிராந்தியத்திலிருந்து அகற்றுவதற்காக, வடகொரியாவுடன் பேச்சு நடத்த அமெரிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தேவைப்பட்டால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அமைதியான தீர்வு என்பதே சரியான தீர்வாக அமையும் என்று வடகொரியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐநா பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் வடகொரியா நிலவரம் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய டில்லர்சன், தனது அண்டை நாடுகள் மீது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் நிஜமானது என்று தெரிவித்தார்.
வடகொரியாவின் அண்டை நாடுகளான தென் கொரியா மற்றும் ஜப்பானில் ஆயிரக்கணக்கான அமெரிக்க படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வடகொரியாவை ராஜீய ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும் என்று மற்ற நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். வடகொரியாவுடன் அமெரிக்கா நேரடியாக பேச்சு நடத்த தயாரா என்று அமெரிக்காவின் என்.பி.ஆர் ஒலிபரப்புக்கு பேட்டியளித்த டில்லர்சன், “கண்டிப்பாக, அந்த வகையில்தான் பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், முக்கியப் பிரச்சனை குறித்து எங்களுடன் பேச்ச நடத்த தயாரா என்பதை வடகொரியாதான் முடிவு செய்ய வேண்டும்,” என்று தெரிவித்தார்.
வடகொரியா மீதான தடைகளை அமல்படுத்த வேண்டும் அல்லது அவர்களுடன் ராஜீய ரீதியாக உறவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐநா. உறுப்பு நாடுகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஐநா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய அவர், ராஜீய மற்றும் நிதி தொடர்பான நடவடிக்கைகளை வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா பயன்படுத்தும் என்று தெரிவித்தார். குறிப்பாக, வடகொரியாவுடன் தொடர்பில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராகவும் தட விதிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தேவைப்பட்டால், வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்தும் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.பல ஆண்டுகளாக வடகொரியா தனது அபாயகரமான போக்கைத் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட டில்லர்சன், சூழ்நிலையை நமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்தார்.
“தென் கொரியா மற்றும் ஜப்பான் மீது வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் நிஜமானது. அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் திறனை வடகொரியா மேம்படுத்தும் காலம் நீண்ட தொலைவில் இல்லை” என்று டில்லர்சன் தெரிவித்தார்.
Published by
வோஷிங்டன் DC: அணு ஆயுதங்களை கொரிய பிராந்தியத்திலிருந்து அகற்றுவதற்காக, வடகொரியாவுடன் பேச்சு நடத்த அமெரிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தேவைப்பட்டால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அமைதியான தீர்வு என்பதே சரியான தீர்வாக அமையும் என்று வடகொரியாவின் நெருங்கிய கூட்டாளியான சீனாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Leave a comment