கென்பரா பல்கலைகலைக்கழத்தால் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட காத்தான்குடி அரூஸ் செரீப்டீன்

aroosகாத்தான்குடி: செய்யத் அரூஸ் செரீப்டீன், அவுஸ்திரேலிய, கென்பரா பல்கலைகலைக்கழத்தால் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.கணனி முகாமைத்துவத்திலேயே இவர் கலாநிதி பட்டம் பெற்றமை விசேட அம்சமாகும். இவருக்கான பட்டம், அண்மையில் கென்பரா பாராளுமன்ற கேட்போர் கூடத்தில் வைத்து பெற்றுக் கொண்டார். பல்கலைக்கழகத்தின் பிரதி உப வேந்தர் பேராசிரியர் சாரா ரைன் வழங்கி வைத்தார்.

இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் கலாநிதி அரூஸ், கிண்ணியாவில் அண்மையில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார்.

aroos

காத்தான்குடியை பிறப்பிடமாக கொண்ட இவர், பேருவளை ஜாமியா நளீமியாவின் பழைய மாணவராவார்.

Published by

Leave a comment