கடையடைப்புக்கு விடைகொடுக்கும் காத்தான்குடி !

kattankudy-jpg-1– AK49

காத்தான்குடி: ஹர்த்தால்- அது காத்தான்குடி மக்களுக்கு புதிதல்ல! 1980-1990- 2000ம் ஆண்டின் மத்திம காலப்பகுதியில் இருந்து யுத்தம் நிறைவுக்கு வரும் வரைக்கும் காத்தான்குடியில் அவ்வப்போது ஹர்த்தால் இடம்பெற்றுக்கொண்டே இருக்கும். புதன்கிழமை வந்தாலே காத்தான்குடி பஸார் ஆடிப்போகும். “நோட்டீஸ் ஒன்றும் இன்னும் வெளியாகவில்லையா” என மக்கள் ளுஹரிலிருந்து எதிர்பார்த்திருப்பார்கள்.

மஹ்ரிப்பிற்கிடையில் அநாமோதய துண்டுப்பிரசுரங்கள் வெளியாகும். வியாழன் ஹர்த்தால், வெள்ளி விடுமுறை. கடற்கரையில் ஒன்று சேர்ந்து கலைவதுடன் ஹர்த்தால் நிறைவுக்கு வரும்.

பலஸ்தீன் முக்கிய போராளி கொல்லப்பட்டாலும் ஹர்த்தால்தான்.

இப்படியே சுடுகாடாகி சென்றுகொண்டிருந்த காத்தான்குடி பஸார் தற்பொழுது யாருக்கும் தலையசைக்காமல் (?) நிமிர்ந்து நிற்கின்றது. ரொம்ப மகிழ்ச்சி!!

நேற்று வட-கிழக்கில் இடம்பெற்ற ஹர்த்தாலை காத்தான்குடி வர்த்தக சங்கம் ஆதரிக்காததால் காத்தான்குடி பஸார் இயல்பு நிலையில் காணப்பட்டது.

தமிழர்கள் அடிவாங்கி விட்டார்கள். அடிவாங்கிக்கொண்டிருப்பவர்களும், மேலும் அடிவாங்க இருப்பவர்களும் இலங்கை முஸ்லிம் சமூகம்தான்.

தம்புள்ளை, அழுத்கமை சம்பவங்களுக்கு முஸ்லிம் தலைவர்கள் குரல் கொடுக்காத போது, தமிழ் தலைவர்கள் கண்டித்திருந்தார்கள்.

எப்போதெல்லாம் ரொஹங்யா முஸ்லிம்கள் அதி உச்சமாகத் தாக்கப்படுகிறார்களோ, அப்போதெல்லாம் இலங்கை முஸ்லிம்களும் தாக்கப்பட்ட வரலாறு சமமாகத் தொடர்கிறது. இப்போது அங்கு அமைதியாக இருக்கிறது. இங்கேயும் அப்படியே மௌனமாக இருக்கிறது. இரு தரப்பு பேரினவாதத்திற்கும் தொடர்பு இருப்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இனிமேல் முஸ்லிம்களுக்கு அடிவிழுந்தால் தமிழ் சமூகம் எதனை வெளிக்காட்டப் போகின்றது என்பது பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

முஸ்லிம் தலைவர்களுக்கிடையில் ஒருபோதும் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை. முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலும் ஒருபோதும் ஒற்றுமை ஏற்படப்போவதில்லை.

kattankudy-jpg-1

இப்போது முஸ்லிம் சமூகம் இயக்கங்களாகப் பிரிந்து சென்றுகொண்டிருக்கின்றது. ஆயுதப் பயிற்சிகள், ஆயுதக் கொள்வனவுகள், மற்றும் இலங்கை சட்ட திட்டத்திற்கு எதிரான பிரச்சாரங்கள் போன்ற காரணங்களைத் தொகுத்து, ஆளாளுக்கு எதிராக புலனாய்வுத்து துறைக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எனவே, எங்களுக்கு அடிவிழுந்தால் இனிமேலும் நாங்களும் குரல் கொடுக்க முடியாத நிலையே தோன்றும். எதிர்த்து நின்றால் பயங்கரவாதச் சட்டத்திற்குள் கைது செய்யக்கூடிய அளவுக்கு இயக்க சண்டைகள் சோடிக்கப்பட்டிருக்கின்றன.

அரசியல் முரண்பாடுகள் காரணமாகவே காத்தான்குடி பஸார் நேற்று திறக்கப்பட்டதாக வெளிப்படையாகவே அனைவருக்கும் தெரிந்த விடயம்.

கொழும்பு-பெட்டா பஸார் போன்று எந்த அரசியல்வாதிக்கும் சோரம்போகாது தொடர்ந்தும் தலை நிமிர்ந்து இயங்கினால், காத்தான்குடி பஸார்- அதுக்கொரு தனி மதிப்பு எதிர்காலத்தில் கிடைக்கும். இல்லையென்றால் நாறிப்போகும்!!AK49

Published by

Leave a comment