பண்டாரவளை: இலங்கையில் பொலீசாரின் சீருடையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பண்டாரவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்தார்.
நீண்ட காலமாக ஒரே நிற பொலீஸ் சீருடை பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்த பொலிஸ் மா அதிபர், தற்போது அது மாற்றப்பட வேண்டிய காலம் எழுந்துள்ளதாக தெரிவித்தார். சர்வதேச ரீதியில் பொலீசாரின் சீருடைகளுக்காக நீல நிறம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
படம்: மலேசிய பொலிஸார்
எனவே, எமது பொலீசாரின் சீருடைகளுக்காக கடும் நீல நிறத்தை அறிமுகப்படுத்த தீர்மானமொன்று இருப்பதாக கூறிய பொலிஸ் மா அதிபர் ஜெயசுந்தர அதனை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.
Published by
பண்டாரவளை: இலங்கையில் பொலீசாரின் சீருடையில் மாற்றங்களை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் புஜித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். பண்டாரவளை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனை அறிவித்தார்.
Leave a comment