கொழும்பு: திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இன்று (24) அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
இன்று (24) பிற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், அலறி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்தே குறித்த முடிவுக்கு வந்ததாக அச்சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில், பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததாக சங்கம் தெரிவித்திருந்தது.
Published by
கொழும்பு: திருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் இன்று (24) அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது.
Leave a comment