வீதியில் பலூன் விற்றவர் பின்னாளில் கோடீஸ்வரர்

mrf tyreதிவோந்ரம்: எம்.ஆர்.எப்-ன் நிறுவனர் பெயர் கே எம் மாமென் மாப்பிள்ளை. கே.எம். மாமென் கடந்த 1922 நவம்பர் 28ஆம் திகதி இந்தியாவின் கேரளா மாநிலத்தில் பிறந்தார். இவரது தந்தை வங்கி மற்றும் செய்திதாள் நிறுவமனம் நடத்தி வந்தார். இந்திய சுதந்திரத்துக்கு முன்னர் டிரிவான்கோர் சமஸ்தானம் மாமென் தந்தையின் சொத்துக்களை பறிமுதல் செய்தது.

இதனால் வீடுகளையும் அந்த குடும்பம் இழந்தது. இதன் பின்னர் தான் படித்த கல்லூரியிலேயே மாமென் இரவில் தங்கினார்.
பின்னர், வெற்றிகரமாக தனது பட்டபடிப்பை முடித்த மாமென் தன் மனைவியுடன் இணைந்து பலூன்கள் மூலம் சிறிய பொம்மைகள் செய்யும் தொழிலை தொடங்கினார்.

பின்னர், பலூன் பொம்மைகளை ஒரு பையில் எடுத்துச் சென்று தெருக்களில் வைத்து அவற்றை விற்பனை செய்தார்.

அவரின் தொழில் திறமை வாடிக்கையாளர்களை ஈர்க்க தொடங்கியது.

mrf tyre

பின்னர் மாமெனின் உறவினர் ஒருவர் டயர் சார்ந்த வியாபாரம் செய்வதை அறிந்த அவர் அதில் உதவியாக சேர்ந்தார்.

டயர்களின் ரப்பர் பற்றி நிறைய அறிந்திருந்த மாமென், ட்ரீட் ரப்பர் டயரை தானே தயாரிக்க முடிவு செய்தார்.அதன்ப்படி சிறிதாக அவர் தொடங்கிய டிரீட் டயர் தயாரிக்கும் தொழில் அவர் கடும் உழைப்பால் எம்.ஆர்.எப் நிறுவனமாக உருவெடுத்தது.

இன்று வரை டிரீட் டயர்களை தயாரிக்கும் ஒரே இந்திய நிறுவனம் எம்.ஆர்.எப் தான்.

சீரான வளர்ச்சிக்குப் பின் மீண்டும் வியாபாரத்தை விரிவுபடுத்த கே.எம் முடிவு செய்தார். இம்முறை அவர் டயர் தயாரிப்பில் கவனம் செலுத்தினார்.

இவரின் பிரம்மாண்ட டயர் தயாரிப்பு ஆலையை அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.

mrf

பின்னர் தொழிலில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த மாமென் பல வெற்றிகளை குவித்து கோடீஸ்வரர் ஆனார்.

மாமெனுக்கு இயற்கையிலேயே ஓவியம் மற்றும் விளம்பரம் செய்வதில் அபார திறன் இருந்தது.

இவர் திறமை காரணமாக பல விளம்பர நிறுவனங்கள் இவரை அணுகியது.

ஒரு புஜபலம் கொண்ட மனிதர் தலைக்கு மேலே எம்.ஆர்.எப் டயரை தூக்கி பிடித்திருப்பது போன்ற உலக புகழ்பெற்ற விளம்பரம் இவரின் கற்பனை தான்.

இதற்கு MRF Muscleman என பெயராகும். இது எம்.ஆர்.எப் டயர்களின் உறுதி தன்மையை விளக்குவதாக இருந்தது.

பல சாதனைகளை புரிந்த கே எம் மாமென் மாப்பிள்ளை கடந்த 2003ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி தனது 80வது வயதில் காலமானார்.

இன்று அவர் உருவாக்கிய எம்.ஆர்.எப் நிறுவனம் உலகின் மிகப்பெரிய டயர் நிறுவனங்கள் பட்டியலில் 15-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment