ஆரையம்பதி மாணவனின் சடலம் காத்தான்குடி கடற்கரையில் கரையொதிங்கியது

deathகாத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி கர்பலாக் கடலில் நீராடச் சென்ற மாணவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, நீரில் மூழ்கிக் காணாமல்போன மாணவனின் சடலம் இன்று நண்பகல் காத்தான்குடி “நதியா” கடற்கரையில் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆரையம்பதி -3, பழைய கல்முனையைச் சேர்ந்த வீரசிங்கம் தர்மதன் (வயது 17) என்ற மாணவன், தனது குடும்பத்தினருடன் கடலில் நீராடச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென்று குறித்த மாணவன் கடல் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

death

இம்மாணவனைத்தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுவந்த நிலையில், குறித்த மாணவனின் சடலம் இன்று மதியம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 7 ஏ மற்றும் 2 பி பெறுபேற்றை இம்மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment