கொழும்பு: நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படக்காரணம் தேவையற்ற செலவுகளே.
கடந்த காலத்தினால் ஏற்பட்ட திருட்டு கொள்ளைகள் மூலமாகவே இத்தகைய பாரிய தொகையினை இலங்கை தொலைத்துள்ளது. அதேபோன்று, எயார் லங்காவினால் ஏற்பட்ட நட்டத்தினால் நாட்டின் ஒரு நபர் 36 ஆயிரம் ரூபா வரை கடனாளியாக மாறிவிட்டனர்.
அதனால் நாட்டில் திருடர்களை இல்லாமல் செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். யார் தவறு செய்தாலும் முறைப்பாடு செய்ய வேண்டும். நிதி மோசடி விசாரணைப் பிரிவு மற்றும் நாட்டின் நீதி முறையாக செயற்படுகின்றது. எதிர்காலத்தில் ஒரு நல்ல நாடாக இலங்கை மாறும் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
Published by
கொழும்பு: நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் சுமார் 5 இலட்சம் வரையில் உலக வங்கிக்கு கடனாக செலுத்த வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர். 9 இலட்சம் கோடிகள் என்பது சாதாரண தொகை அல்ல. இதனை நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து செலுத்துவதற்கு முயல வேண்டும். இவ்வாறான நிலை ஏற்படக்காரணம் தேவையற்ற செலவுகளே.
Leave a comment