ஹிஸ்புல்லாஹ்வின் “சேவைக்காலம்” குறைக்கப்பட்டது ஏன்…?

  • AK-99

hizbullahகாத்தான்குடி: கிழக்கிலங்கையின் சிரேஷ்ட அரசியல்வாதிகளுள் ஒருவரும், ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் 25 வருட அரசியல் வாழ்க்கையின் தொகுப்பு “கிழக்கு வாசல்” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (10)  காத்தான்குடியில் இடம்பெற்றது.

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அரசியல் பிரவேசம் 1988 மாகாணசபைத் தேர்தலில் இருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கிறது. 2004 மற்றும் 2016 ஆகிய இரு பாராளுமன்றத் தேர்தலிலும் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2004 மற்றம் 2008 இடைக்காலப் பகுதியில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் காத்த மண்ணுக்கும் சமூகத்திற்கும் எதுவும் செய்யவில்லை என்றும் கூற முடியாது.

இதைவிடவும், கடந்த 2016 பாராளுமன்றத் தேர்தலில், “ஹிஸ்புல்லாஹ் 30 வருட அரசியல் செய்கிறார். அவரது அபிவிருத்தியில் காத்தான்குடி எதை அடைந்திருக்கிறது” என அவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள் மேடைகளில் பேசியதற்கு, ஹிஸ்புல்லாஹ் ஓர் செவ்வியில்

hizbullah

ஹிஸ்புல்லாஹ்வின் “சேவைக்காலம்” குறைக்கப்பட்டது ஏன்…? AK-99

“நான் 30 வருடங்களாகத்தான் இந்த ஊருக்கு சேவை செய்வதாக இவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால் நான் அதைவிடவும் அதாவது 1988 மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் இருந்தே இந்த மண்ணுக்கு நான் சேவை செய்து வருகிறேன்”

என்பதாகக் கூறியிருந்தார்.

எனவே, ஹிஸ்புல்லாஹ்வின் சேவைக்காலம் 25 வருடங்களா?, 30 வருடங்களா?? அல்லது அதைவிடவும் அதிகமானதா என்பதில் இங்கு பல கேள்விகள் எழுகின்றன.

ஹிஸ்புல்லாஹ்வின் சேவைக்காலம் 25 வருடங்கள் என்று ஓர் நூல் வெளியிட்டு, பாராட்டு மழை பொழிந்ததில் அர்த்தம் இருக்கின்றதா என்பதைத் தேடித்தான் பார்க்கவேண்டும்!

Published by

Leave a comment