கந்தூரிச் சோறு நஞ்சானதால் மூவர் மரணம்! 600 பேர் வைத்தியசாலையில்!!

kanthoori irakkamamஇரக்காமம்: அம்பாறை மாவட்டம், இரக்காமம் முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்றில் நேற்று (6) வழங்கப்பட்ட கந்தூரிச் சோறு அஜீரணமானதால் 600க்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரக்காமம் வைத்தியசாலையில் மாத்திரம் இன்னமும் 80 பேர் சிகிச்சை பெறுவதாக கூறப்படுகின்றது. இந்த நோயாளிகளுக்கு மேலதிகமாக அக்கறைப்பற்று மற்றும் அம்பாறை பகுதி வைத்தியசாலைகளில்  சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கந்தூரிச் சோற்றின் நச்சுத்தன்மை காரணமாக மூவர் மரணித்துள்ளதாகவும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

kanthoori irakkamam

இதே நேரத்தில் காத்தான்குடியில் இருந்தும் கந்தூரிச் சோறு வாங்கி அருள்பெற பக்தர்களும் அங்கு சென்றனரா, பாதிக்கப்பட்டவர்களுள் காத்தான்குடி பக்தர்களும் உள்ளடங்குகின்றனரா போன்ற தகவல்களும் திரட்டப்படுகின்றன.

Published by

Leave a comment