“ஐ.எஸ். அமைப்பில் இணைந்துகொண்ட இலங்கையர்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர்”- பிரதமர்

ranilகொழும்பு: இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள், கடும் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து சிரியாவுக்குச் சென்று ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து கொண்டவர்கள் தொடர்பில் பிரதமர் கருத்து வெளியிட்டார். அவ்வாறு இணைந்து கொண்டவர்களில் சிலர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் யார் என்பதைக் அடையாளம் கண்டு அவர்களின் குடும்பத்தவர்களுடன் பேச்சுகளை மேற்கொண்டுள்ளோம்.

இலங்கையிலிருந்து சென்றவர்கள் அமெரிக்கா, ஈராக் மற்றும் சிரிய படையினர் முன்னேறிவருவதன் காரணமாக கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதே இறுதியாக எமக்குக் கிடைத்த செய்தியாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment