எடின்ப்ரோ: பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வேளையில், ஸ்கொட்லாந்து, பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பொது வாக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட உள்ளது. பிரித்தானியாவை விட்டு ஸ்கொட்லாந்து வெளியேறுவதற்கு, ஸ்கொட்லாந்து எம்பிக்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்கொட்லாந்தின் ஃபெஸ்ட் மினிஸ்டர் நிக்கோலா ஸ்டர்ஜியன் பிரித்தானிய பிரதமர் தெரெசா மேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோலா எழுதிய கடிதம் இன்று வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிக்கோலா ஸ்கொட்லாந்து வெளியேறுவது குறித்து பொதுவாக்கெடுப்பை 2018 அல்லது 2019 ஆண்டிற்குள் நடத்தி முடிக்கவேண்டும் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.
ஆனால் ஸ்கொட்லாந்து செயலாளர் டேவிட் மண்டுல், ஸ்காட்லாந்தின் இந்த முடிவுக்கு பிரித்தானிய அரசு அனுமதி அளிக்குமா என்பது கேள்விக்குறி தான் என்று கூறியுள்ளார்.
Published by
எடின்ப்ரோ: பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வேளையில், ஸ்கொட்லாந்து, பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான பொது வாக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட உள்ளது. பிரித்தானியாவை விட்டு ஸ்கொட்லாந்து வெளியேறுவதற்கு, ஸ்கொட்லாந்து எம்பிக்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Leave a comment