கொழும்பு: கடந்த 10/03 அன்று காத்தான்குடியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலுக்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அத்தடன் இலங்கையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் இருப்பின் அரசாங்கம் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் ஏ.கே. ஹிஷாம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் நேற்று (16) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Leave a comment