ஸ்கொட்லாந்து விடுதலைக்கு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு

scotlandலண்டன்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்று தனி நாடாகும் நோக்கில் புதியதொரு மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதற்கு அதிகாரம் பெற விரும்புவதாக ஸ்ட்கொலாந்து முதன்மை அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஜக்கிய ராஜ்ஜியம் வெளியேறுவதற்கு முறையான நடவடிக்கைகளை தொடங்குகின்ற வரைவு மீது வாக்கெடுப்பு நடத்த பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயார் செய்து வருகையில் ஸ்டர்ஜன் இவ்வாறு அறிவித்திருக்கிறார்.

பிரிட்டிஷ் அரசு அதனுடைய விட்டுக்கொடுக்காத தன்மையால் வீணாகி போவதாக குற்றஞ்சாட்டியுள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரிட்டன் வெளியேறுவதை ஸ்கொட்லாந்து ஏற்றுக்கொண்டாலும், ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் வெளியேறுவதை ஸ்கொட்லாந்து விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

scotland

 

Published by

Leave a comment