மட்/அல்ஹிறா மஹா வித்தியாலய அதிபர் ஹக்கீம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கௌரவிப்பு

  • எம் எச் எம் அன்வர்

காத்தான்குடி: அதிபர் சேவை பரீட்சையில் சித்திபெற்றமையிட்டும் பாடசாலைக்காக பாடசாலை வளர்ச்சியில் அர்ப்பணிப்படன் சேவையாற்றி வருவதையிட்டும் காத்தான்குடி மட்/மம/அல்ஹிறா மஹா வித்தியாலய அதிபர் ஏ ஜீ எம் ஹக்கீம் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால்  10.03.2017  பாடசாலையில் கௌரவிக்கப்பட்டார்.

மேற்படி நிகழ்வுக்கு அபிவிருத்திசங்க செயலாளர் எம் ஐ எம் றசீட்,  உறுப்பினர்களான கே எல் எம் பரீட், எம் டி எம் அஸ்மி தாஜூதீன்,  எம் எச் எம் அன்வர்,  எம் எஸ் றுஸ்தான்,  முன்னாள் ஆசிரிய ஆலோசகர் என் எம் பரீட்,  பிரதி அதிபர் எம் எம் அமீன் மற்றும் பாடசாலை ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி மட்அல்ஹிறா மஹா வித்தியாலயமானது காத்தான்குடியில் உள்ள மூன்று ஆண் பாடசாலைகளில் ஒன்றாகும் இதற்கு அதிபர் வெற்றிடம் நீண்ட காலமாக காணப்பட்ட போதிலும் தற்போதய அதிபர் ஏ ஜீ எம் ஹக்க்Pம் அவர்களால் பொறுப்பேற்கப்பட்டு கடந்த காலங்களில் சிறந்த பெறுபேறுகளை ஈட்டி சிறந்ததொரு பாடசாலைகளில் ஒன்றாக வலயக்கல்வி பணியகத்தால் புள்ளிகள் 73 பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Published by

Leave a comment