கெக்கிராவ: கெக்கிராவ முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் சுலைஹா பானு அவர்கள் அப்பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளை இடைநிறுத்தம் செய்துள்ளார். இதற்கான சரியான காரணம் எதுவும் முன் வைக்கப்படவில்லை. இப்பிள்ளைகளின் பெற்றோர்கள் செய்வதறியாமல் தடுமாரிக்கொண்டிருக்கின்றார்கள். வலையக்கல்வி பணிப்பாளர் இது தொடர்பாக கவனம் செலுத்தாமல் இருப்பதையிட்டு பெற்றோர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கம் தங்களுக்கென இலவசமாக வழங்கும் கல்வியை கற்பது அனைத்து மாணவ மாணவிகளின் உரிமையாகவும். அவர்களது இந்த உரிமையை தகுந்த காரணமின்றி எவரும் பறிக்க முடியாது. இவ்வாறு இருக்கையில் தகுந்த காரணம் எதுவும் முன்வைக்காமல் ஐந்து மாணவிகளை பாடசாலையை விட்டு இடை நிறுத்தம் செய்வது எந்த வகையில் சரியாகும்.
இது தொடர்பில் பாடாலை நிருவாகம், வலையக்கல்வி நிருவாகம் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தங்கள் பெண் பிள்ளைகளுக்கான நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பாடசாலை அதிபருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அப்பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
- ஐ.எம்.மிதுன் கான்
Leave a comment