மர்ஹூம் ஜெனீரா பானுவை பட்டமளிப்புக்கு சமூகமளிக்குமாறு கிழக்குப் பல்கலைக்கழகம் அழைப்பு!

ஏறாவூர்: கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஏறாவூரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய தாய், மகள் இரட்டைப் படுகொலைச் சம்பவத்தில் கொல்லப்பட்டவரான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) என்ற பெண்னுக்கு ஏப்ரல் 8ஆம் திகதி இடம்பெறவுள்ள பட்டமளப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டதும் தான் கதறி அழுததாக கணவர் மாஹிர் தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.இந்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 6 பேரும் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஆறு பேரும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் பெப்ரவரி 22, ஆம் திகதி ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை மார்ச் மாதம் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

Published by

Leave a comment