பிரித்தானியாவில் புதிய சட்டம் அமுல்

Rainy-Britain[1]லண்டன்: பிரித்தானியாவில் வாகனம் ஓட்டும்போது ஓட்டுனர்கள் செல்போன் பயன்படுத்தினால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் புதிய சட்டம் 01/03 முதல் அமலாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாகனங்கள் ஓட்டும்போது செல்போன்கள் பயன்படுத்துவதால் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றன.

இதனை தீவிரமாக கட்டுப்படுத்தும் வகையில், செல்போன் பயன்படுத்தி கொண்டு வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களுக்கு 200 பவுண்ட் (37,000 இலங்கை ரூபாய்) அபராதம் விதிக்கப்படும்’ என்ற புதிய கட்டுப்பாடு சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த புதிய சட்டங்கள் நேற்று (மார்ச் 1) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.

Rainy-Britain[1] uk

இதுபோன்ற குற்றங்களில் ஈடுப்படும் ஓட்டுனர்களுக்கு 6 புள்ளிகள் எடுக்கப்படுவதுடன், அவர்களுக்கு 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். எனினும், புதிய சட்டம் அறிமுகமான முதல் நாளிலேயே சில ஓட்டுனர்கள் செல்போன்களை பயன்படுத்திக்கொண்டு வாகனங்களை இயக்குவது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Published by

Leave a comment