மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்ட லண்டன்

londonலண்டன்: பிரித்தானியாவின் தலைநகர் லண்டன் நகரமே இதுவரையில் வாழ்க்கை செலவு அதிகமான நகர பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. செவில்ஸ் என் எஸ்டேட் நிறுவனத்தின் ஆய்விற்கமைய நிவ்யோர்க் மற்றும் ஹொங்கொங் முதலாம், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

பிரெக்ஸிட் வாக்கெடுப்பின் பின்னர் பவுண்ட் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே லண்டன் வாழ்க்கை செலவு பட்டியலில் முதலாம் இடத்தில் இருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். லண்டனில் ஒருவருக்கு தற்போது சராசரியாக வீடு மற்றும் அலுவலக வசதிக்கான வாடகைகளின் மொத்த செலவு 71,000 பவுண்ட் என கணிக்கப்பட்டுள்ளதாக எஸ்டேட் முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

london

முதலாம் இடத்தில் உள்ள நிவ்யோர்க் (90,700 பவுண்ட்) மற்றும் ஹொங்கொங் (85,000 பவுண்ட்) ஆகிய நகரங்கள் தற்போது லண்டனை விடவும் அதிக வாழ்க்கை செலவை கொண்ட நகரமாகியுள்ளது.எப்படியிருப்பினும், கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு வாக்களித்த பின்னர் பவுண்ட் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறித்த பட்டியலின்படி லண்டன் தற்போது பரிஸ் (60,900 பவுண்ட) மற்றும் டோக்கியோ (60,000) பவுண்ட் ஆகிய நகரங்களை நெருங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

Published by

Leave a comment