காணாமல் போன தங்க ஆபரண பொதியை எஜமானிடம் ஒப்படைத்த இலங்கைத் தொழிலாளி! இளவரசர் பாராட்டு!!

gold coinsறியாத்: காணாமல் போன தங்க ஆபரண பொதி ஒன்றைக் கண்டெடுத்த இலங்கையைச் சேர்ந்த பணியாளர் ஒருவர், அதனை தனது எஜமானிடம் கொடுத்தன் காரணமாக அவருக்கு பாராட்டு கிடைத்துள்ளது. சவூதி அரேபிய சுற்றுலா மற்றும் தேசிய உரிமைகளுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவர் இளவரசர் சல்மான் பின் சுல்தான் இலங்கை பிரஜையின் நேர்மையை பாராட்டியுள்ளார்.

அத்துடன் சவூதி அரசு வழங்கும் பெறுமதியான சான்றிதழையும் வழங்கியுள்ளார். வீட்டை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையை சேர்ந்த இந்த தொழிலாளிக்கு ஒரு பொதி கிடைத்துள்ளது. அதனை திறந்து பார்த்த போது அதில் பெறுமதியான தங்க ஆபரணங்கள் இருந்துள்ளன. இதனையடுத்து அதனை உடனடியாக தனது எஜமானிடம் கொடுத்துள்ளார்.

தொழிலாளியின் நேர்மை பாராட்டுக்குரியது எனவும் அது அவரது தாய் நாட்டுக்கு பெருமை எனவும் வெளிநாட்டில் இருந்து தொழிலுக்காக வந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இது சிறந்த முன்னுதாரணம் கிடைத்துள்ளதாகவும் இளவரசர் சல்மான் பின் சுல்தான் கூறியுள்ளார்.

குறித்த தொழிலாளியின் விபரங்கள் வெளியிடப்படவில்லை

Published by

Leave a comment