-
ஹாசிப் யாஸீன், அகமட் எஸ். முகைடீன்
கண்டி: விளையாட்டுத்துறை அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மத்திய மாகாணத்திற்கான விளையாட்டு மைதான தொகுதி கண்டி திகனயில் திறந்து வைக்கும் நிழகழ்வு (01) புதன்கிழமை மிக கோலகலமாக நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர மற்றும் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரின் அழைப்பின் பேரில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டுத் தொகுதியினை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டார். இதில் மத்திய மாகாண ஆளுநர் நிலுக ஏக்கநாயக்க உள்ளிட்ட அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கிராம மட்டத்திலுள்ள வீர, வீராங்கனைகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்லும் முகமாக மாகாண மட்டத்திலான மைதான அபிவிருத்தித் வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி மைதானம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Leave a comment