இலங்கை அணியில் முதன் முறையாக இடக்கை சுழற்பந்துவீச்சாளர்

malinda-pushpakumaraகொழும்பு: பங்களாதேஷ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் 7 துடுப்பாட்ட வீரர்கள் 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இத்தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேராத் அணித்தலைவராக உள்ளார்.

மேலும் முதன் முறையாக இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மலிந்த புஷ்பகுமார (29) இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

malinda-pushpakumara
மலிந்த புஷ்பகுமார

டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி வீரர்களின் முழு விபரம்:

ரங்கன ஹேரத் (அணித் தலைவர்)
திமுத் கருணாரத்ன
நிரோஷன் டிக்வெல்ல
உபுல் தரங்க
தனஞ்சய டி சில்வா
குசால் மெண்டிஸ்
தினேஸ் சந்திமால்
அசேல குணரத்ன
சுராங்க லக்மால்
நுவான் பிரதீப்
லஹிரு குமார
விகும் சஞ்சய பண்டார
லக்ஷான் சந்தகன்
டில்ருவான் பெரேரா
மலிந்த புஷ்பகுமார

Published by

Leave a comment