பாதாளத்தை நோக்கிய இலங்கையின் வர்த்தகம்: 175 ரூபாவை நெருங்கும் டொலர்

us-dollar-moneyகொழும்பு: இலங்கையில் சமகாலத்தில் காணப்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உயர் வர்த்தகர்கள் அதிருப்பதி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, நாற்பதுக்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இலங்கையில் தற்போது காணப்படுகின்ற நிலைமை தொடர்பில் ஆய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் சிறப்பு ஆலோசகர்கள் குழுவொன்று எதிர்வரும் வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.

எதிர்வரும் வருடம் திறைசேரி மற்றும் முறி கடன் செலுத்துவதற்காக கிட்டத்தட்ட 94,500 கோடி ரூபாய் பணம் தேவைப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் 72,000 கோடி ரூபாய் என்ற கடன் பணத்தை மாத்திரமே பெற்றுக் கொள்ள முடியும் என மத்திய வங்கி ஆளுநரினால், உத்தியோகபூர்வமாக அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் வெளியாகியதனை தொடர்ந்தே இலங்கையின் முக்கிய வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலைமையில் இருந்து மீள்வதற்காக எதிர்வரும் காலங்களில் உள்நாட்டு கடன் பெற்றுக் கொள்வதனை குறைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, மீண்டும் ரூபாய் வீழ்ச்சியடைந்து டொலருக்காக 154 ரூபாய் செலுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது. இவ்வாறு ரூபாய் வீழ்ச்சியடைந்தால் ஜுன் அல்லது ஜுலை மாதத்திற்குள் டொலரிற்காக 175 ரூபாய் செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டினுள் காணப்பட வேண்டிய அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு விரைவாக வீழ்ச்சியடைந்துள்ளதாக காணப்படுகின்ற பொருளாதார நிலையை கருத்திற் கொண்டு பல்வேறு பிரிவுகள் தெரிவித்துள்ளது. 950 கோடி ரூபாய் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு தற்போது நாட்டில் காணப்பட வேண்டும். எனினும் கடந்த ஜனவரி மாதம் இறுதிவரையில் 550 கோடி ரூபாய் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்புகளே காணப்பட்டுள்ளன. இதனாலேயே ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Published by

Leave a comment