“கோஹ்லியை காலி செய்வேன்”- ஆட்டோ ஓட்டுனர் மகன் சவால்

iplஐதராபாத்: ஐபிஎல் தொடரில் விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என ஆட்டோ ஓட்டுனரின் மகன் முகமது சிராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனரின் மகனான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ரூ 2.6 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ், இந்தியா ஏ அணிக்காகவும் விளையாட உள்ளார்.

இதுகுறித்து முகமது சிராஜ் கூறியதாவது,

தன் தந்தை 30 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக இருப்பதாகவும், இனி அவர் கஷ்டப்பட வேண்டாம். ஐபிஎல் ஏலத்தொகையை வைத்து முதலில் தந்தைக்கு ஐதராபாத்தில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கும் போது, தனது அபார பந்துவீச்சால் விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ipl

Published by

Leave a comment