லண்டன்: லண்டன் – ஸ்டேன்டட் விமான நிலைத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330ஏ எயார் பஸ் விமானம் லாகூரில் இருந்து பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி பயணித்தது.
எனினும், இந்த விமானம் பிரித்தானியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என தகவல் கிடைத்ததையடுத்து, குறித்து விமானம் பிரித்தானிய விமான படையின் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இதனையடுத்து, குறித்த விமானத்தை சோதனையிட்ட போது, விமானத்தில் இருந்து கலீட் பகா என்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் பல்வேறு தீவிரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.
Published by
![Book-Travel-on-SriLankan-Airlines[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/book-travel-on-srilankan-airlines1.jpg?w=147&h=150)
Leave a comment