லாஹூர்: பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான அசார் அலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் 4-1 என்ற கணக்கில் இழந்தது, இதுமட்டுமின்றி சமீபகாலமாகவே அசார் அலி தலைமையிலான அணி தொடர் தோல்விகளை சந்தித்து வந்ததால் கடும் விமர்சனங்கள் எழுந்தது.
இதனையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார் அசார் அலி, இதனை தொடர்ந்து டி20 கிரிக்கெட் அணியின் அணித்தலைவரான சர்ஃப்ராஸ் அஹமது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Published by


Leave a comment