காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக பரீட் தெரிவு

– ஏ.எல்.டீன்பைரூஸ்

fareedகாத்தான்குடி வர்த்தக சங்கத்தின் புதிய தலைவராக முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், பிரபல சமூக சேவையாளர் கே.எல்.எம்.பரீட் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம் பெற்ற காத்தான்குடி வர்த்தக சங்கத்தின் நிர்வாக சபை கூட்டத்தின் போது மேற்படி தெரிவு இடம் பெற்றதாக அதன் நிர்வாக சபை உறுப்பினர் தெரிவித்தார்.

புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள கே.எல்.எம்.பரீட் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,

காத்தான்குடி வர்ததக சங்கத்தின் தலைராக தெரிவு செய்யப்பட்ட ஜீ.எம்.அஜ்வத்,  தன்னால் தலைவராக செயல்பட முடியாது என்று தெரிவித்தமையினை அடுத்து இடம் பெற்ற நிர்வாக சபை கூட்டத்தின் போது தான் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

காத்தான்குடி வர்ததக சங்கத்திற்கான புதிய கட்டிடம் ஒன்றினை வாடகைக்கு பெற்றுள்ளோம். அது பிரதான வீதி டாக்டர் அலீமா வைத்தியசாலையின் மேல் மாடியில் அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

காத்தான்குடி வர்ததக சங்கத்தின் ஊடாக் ஆக்கபூர்வமான பல நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற் கொள்ளவுள்ளதாகவும் இதன் போது முன்னால் கே.எல்.எம்.பரீட் தெரிவித்தார்.

Published by

Leave a comment