கொழும்பு: இன்று நள்ளிரவு (07) முதல் அமுலாகும் வகையில் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.தற்போதுள்ள சந்தை விலைகளின் அடிப்படையில், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அரசாங்கம் உச்ச விலையை நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
1 கிலோ கிராம் சம்பா அரிசி – ரூபா 80
1 கிலோ நாட்டரிசி – ரூபா 70
1 கிலோ கிராம் பச்சை அரிசி – ரூபா 70என உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, குறித்த விலையிலும் பார்க்க அதிக விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Published by

Leave a comment