மடத்திற்குள் லட்சக்கணக்கான மெதம்பெட்டமைன் மாத்திரையை பதுக்கிய பெளத்த பிக்கு கைது

monk buddhistமியான்மாரில் பெளத்த பிக்குகள் வசிக்கும் ஒரு மடத்திற்குள் சுமார் 40 லட்சத்திற்கும் அதிகமான மெதம்பெட்டமைன் என்ற மாத்திரை மறைத்து வைக்கப்பட்டிருந்ததது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து பெளத்த பிக்கு ஒருவரை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரக்கீன் மாநிலத்தில் மூத்த பெளத்த பிக்கு ஒருவரின் காரிலிருந்து சுமார் நான்கு லட்சம் மாத்திரைகளை போலீஸார் கண்டுபிடித்ததை தொடர்ந்து போலீஸார் அவரை தடுப்புக்காவலில் எடுத்தனர். சமீப ஆண்டுகளில் சட்டவிரோத போதை பொருட்களை தயாரிக்கும் முன்னணி உற்பத்தியாளராக மியான்மார் உருவெடுத்துள்ளது.

Published by

Leave a comment