நியுயோர்க்: ஏழு முக்கிய முஸ்லிம் நாடுகள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த பயணத்தடையை அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தாற்காலிகமாக ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை அதிபர் டிரம்ப் சீற்றத்துடன் கண்டித்துள்ளார்.
பயணத்தடையை தாற்காலிகமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த நீதிபதி, அடிப்படையில் சட்ட அமலாக்கத்தை நீக்கிவிட்டார் என்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த உத்தரவானது மாற்றப்படும் என்று டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமையன்று சியாட்டலில் நீதிபதி வழங்கிய ஒரு உத்தரவை எதிர்த்து டிரம்ப் நிர்வாகம்மேல்முறையீடு செய்யும் என்று முன்னரே அறிவித்திருந்தது.
Leave a comment