– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
மட்டக்களப்பு: சில மாதங்களில் எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எவரும் எதிர்பார்க்காத வகையில் எவையும் நடக்கலாம் என்ற வகையிலே இந்த படத்தில் இவ்வாறு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் மிகவும் மகிழ்ச்சிகரமாக தங்களை மறந்து சந்தோசப்பட்டு கொண்டிருக்கும் நிலை எடுத்துக் காட்டும் விடயமாக உள்ளது.
ஆனால் வரலாற்றினை பிரட்டிப்பார்கின்ற பொழுது கடந்த 2008ம் ஆண்டு முதன் முதலாக கிழக்கு மாகாணம் மாகாண சபை தேர்தலை எதிர் நோக்கிய வேளையில் கடைசி நேரத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசினை விட்டு ஒதுங்கி பிரதி அமைச்சர் அமீர் அலியுடன் கூட்டுச் சேர்ந்து மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்று வேட்பாளர்களை ஏறாவூர், காத்தான்குடி, கல்குடா என மூன்று முக்கிய பிரதேசங்களில் களமிறக்கி அதில் அபார வெற்றியுடன் சாத்தித்தும் காட்டினர்.
அதே போல் 2012ம் ஆண்டைய மாகாண சபை தேர்தலிலும் குறித்த ஹிஸ்புல்லா அமிர் அலி கூட்டனது அதே வெற்றியினை சாத்தித்தே காட்டியிருந்தது. ஆனால் மறுபக்கத்தில் முஸ்லிம் காங்கிரசானது மூன்று வேட்பாளர்களை கல்குடாவில் மட்டும் களமிறக்கியதால் கல்குடா முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி சிதறடிக்கபட்டு மாகாண சபை பிரதி நிதித்துவமானது தற்போதைய கிழக்கின் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நசீர் அஹமட்டின் கைக்கு சென்றடைவதற்கு இலகுவாக அமைந்திருந்தது.
அந்தவகையிலே கடந்த ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் ஹிஸ்புல்லா மஹிந்த ராஜபக்ஸவின் பக்கமே இருந்து அரசியல் முன்னெடுப்பினை செய்திருந்ததினால் அமீர் அலி ஹிஸ்புல்லா கூட்டில் சிறிது விரிசல் ஏற்பட்டிருந்தமை தெரிந்த விடயமாகும்.
ஆனால் தற்பொழுது நாடு எதிர்கொள்ள இருக்கின்ற மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி தேர்தல்களில் மீண்டும் ஹிஸ்புல்லா அமீர் அலி கூட்டானது வலுவான நிலைக்கு புதிப்பிக்கபட்டு அதற்கு இன்னும் வலுச்சேர்க்கும் வகையில் மாவட்டத்தில் Genuine Politician என அழைக்கபடும் அலிஷாஹிர் மெளலானவும் கைகோர்க்க தயாராக இருக்கின்றார் என்பதனை இந்த போட்டோக்கள் சான்று பகிரும் அளவிற்கு இன்று எடுத்துகாட்டுவதாக அமைகின்றது.
அப்படி என்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்கலையும், முஸ்லிம்கள் ஆழுகின்ற மூன்று முக்கிய பிரதேச சபைகளையும் மீண்டும் அமீர் அலி- ஹிஸ்புல்லா கூட்டு கைகளில்தான் சங்கமிக்க இருக்கின்றது என்பது தெளிவாகும் அதே நேரத்தில் மாவட்டம் எதிர் நோக்க உள்ல தேர்தல்களில் சாதிக்கும் வகையிலும், எவரும் எதிர்பாக்க முடியத அரசியல் திருப்பங்களை ஏற்படுத்த இருக்கின்றார்கள் என்பதை எதிர்வு கூற கூடியதாக இருக்கின்றது இங்கு

Leave a comment