கொழும்பு: ஜோதிடர் விஜித ரோஹண விஜயமுனி, பொலிஸ் குற்றவியல் விசாரணை பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி தொடர்பில், அவரை அவமதிக்கும் வகையிலான ஒளிப்பதிவுக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பிலேயே அவர் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரணிப்பார் என அவர் எதிர்வுகூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட CID யினர் அவரை இன்று (31) கைது செய்துள்ளதோடு, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Leave a comment