நுகேகொடை: தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்ற போது கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு இப்போது நாட்டை பிளவு படுத்தும் அரசியல் யாப்பை கொண்டு வந்து விட்டார்கள். எனது ஆட்சி காலத்தில் பாரிய அளவு கடன் பெற்றோம் என்று கூறி வருகின்றார்கள். ஆனால் இப்போதைய ஆட்சியில் செய்தது ஒன்றும் இல்லை.
கேட்டால் அப்போதைய கடனைக் கட்டினோம் என்று கூறுகின்றார்கள். நாம் பெற்றுக் கொண்டது நீண்ட கால கடன் திட்டமே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.இப்போது நாட்டை வெளிநாடுகளுக்கு விற்றுக் கொண்டு வருகின்றார்கள். அவற்றினை வாங்குபவர்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடந்த கால ஆட்சியை விடவும் ,கடந்த வருடம் ஊழல் அதிகம் இடம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேறி வருகின்றது. மக்களே ஊழல்கள் இப்போது அதிகமாக இடம் பெற்று வருகின்றது. அதனால் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை செய்கின்றேன். அதேபோன்று திருட்டுகளும், ஊழல்களும் அதிகம் இடம் பெற்று வருகின்றது என்பது ஜனாதிபதிக்கும் தெரியும். தெரிந்தும் அவற்றிக்கு அனுமதி கொடுத்துக் கொண்டு வருகின்றார்.
அரசியல் தலைவர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள், ஆனால் அப்பாவி மக்களை பலா இலைகளையும், குரோட்டனையும் உண்ண சொல்கின்றார்கள்.எனது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படவில்லை. ஆகவே தயவு செய்து கேட்டுக் கொள்கின்றேன் விழிப்படையுங்கள், மாற்றம் ஏற்பட வேண்டும்.
ஓரினதிருமணம் என புதுப்புது திட்டங்களினால் நாட்டை சீரழித்து கொண்டு வருகின்றார்கள். அவர்களிடம் நான் ஒன்றை கூறிக்கொள்கின்றேன் இலங்கையின் கலாச்சாரத்தை மட்டும் அழிக்க வேண்டாம். நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் அதற்காக நாங்கள் தயாராக இருக்கின்றோம் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
Published by
![mahinda_rajapaksa_addresses[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/mahinda_rajapaksa_addresses1.jpg?w=150&h=107)
Leave a comment