லண்டன்: அமெரிக்க டொலருக்கு எதிராக பிரித்தானியா நாணயமான பவுண்டின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பிரெக்ஸிற் (BREXIT) தீர்மானம் பிரித்தானிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட வேண்டும் என நேற்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அமெரிக்க டொலருக்கு எதிரான பவுண்ட் நாணய பெறுமதி 0.5% வீதத்தால் குறைவடைந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான வாக்கெடுப்பின் பின்னர், பவுண்டின் பெறுமதியில் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது. கடந்தாண்டு நிறைவுப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிச் செல்லும் நடைமுறையை பாராளுமன்ற அனுமதியுடனேயே மேற்கொள்ள வேண்டும் என பிரித்தானிய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
குறித்த தீர்ப்புக்கு எதிராகவே அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில் நேற்று உச்ச நீதிமன்றின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதேவேளை அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி அடைந்துள்ளது. வெளிநாட்டு வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என பொருளியலாளர்கள் சுட்டிக்காட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by
![British-Pounds[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/british-pounds1.jpg?w=150&h=112)
![British-Pounds[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/03/british-pounds1.jpg?w=615&h=461)
Leave a comment