டுபாய்: இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி ஒற்றைத் தொடரில் மூன்று அரைசதங்கள் அடித்து சாதனை படைத்திருந்ததை, ஆப்கானிஸ்தான் வீரர் சாசத் தற்போது முறியடித்து சாதனை படைத்துள்ளார். துபாயில் ஐசிசி நடத்தும் “டெஸேர்ட் T20” போட்டி கடந்த ஜனவரி 14 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முகமட் ஷெஷாட் நான்கு அரைசதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி கடைசியாக நடைபெற்ற உலகக்கிண்ணம் டி20 போட்டியில் மூன்று அரை சதங்கள் அடித்திருந்தார் . தற்போது அதை முகமட் ஷெஷாட் நான்கு அரைசதங்கள் அடித்து முறியடித்துள்ளார்.
மேலும் இத்தொடரின் ஒரே நாளில் இரண்டு அரைசதங்கள் அடித்த ஓரே ஆப்கானிஸ்தான் வீரர் என்ற பெருமையும் முகமட் ஷெஷாட் பெற்றுள்ளார்.
Published by


Leave a comment