சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் மாணவ தலைவர்ளுக்கான தேசிய மாநாடு

  • ஏ.எல். டீன்பைரூஸ்

chandrika-with-studentsகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா  குமாரதுங்க தலைமையின்கீழ் செயல்படும் ‘தேசிய ஒருமைப்பாட்டிக்கும் நல்லினத்துக்குமான அலுவலகம்’ ஏற்பாடு செய்திருந்த தேசிய ஒருங்கிணைப்பு நல்லினக்கத்தையேட்டி மாணவ தலைவர்களுக்கான தேசிய மாநாடு சந்திரிக்கா  குமாரதுங்க தலைமையில் (13.01.2017 வெள்ளி) பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் முழு நாள் நிகழ்வாக நடைபெற்றது.

chandrika-with-students

மேற்படி மாநாடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார குமாரதுங்க தலைமையில் இடம்பெற்றது.  நிகழ்வின் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசென கலந்து கொண்டார்.

students1

மாவட்டத்திலிருந்து 10 மாணவர்கள் என்ற அடிப்படையில் நாடுபூராகவுமிருந்து மாணவர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர். மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலிருந்து 10 மாணவ, மாணவிகள்,ஆசிரியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதுடன் அதற்கான ஒருங்கினைப்பினை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் உதவிக்கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.சரீப் அவர்கள் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

students

Published by

Leave a comment