காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் 2017

  • ஏ.எல். டீன்பைரூஸ்

kadeeb-imamகாத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார்,இமாம்கள் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் (12.01.2017 வியாழன்) புதிய காத்தான்குடி மட் அன்வர் வித்தியாலயத்தில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மௌலவி கே.எம்.எம் மன்சூர் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

சுமார் 160 க்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டு இயங்கும் மேற்படி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் நடப்பாண்டின் புதிய நிர்வாக சபைக்கான தேர்வு இடம் பெற்றது.

பள்ளிவாயல்களில் கதீப்மார்களாக, இமாம்களாக கடமையாற்றும் உலமாக்களின் சேம நலன்களிலும்,அவர்களின் மேம்பாட்டிக்காகவும் அதி டிய கவனம் செலுத்தி வருவது மாத்திரமின்றி பல திட்டங்களிளை வகுத்து காலத்திற்கேற்ப பல்வேறு உதவிகளையும்,ஒத்தாசைகளையும் மிகவும் சிறப்புடன் வழங்கி வரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் முன்மாதிரி முழு உலகத்திற்கும் ஓர் முன்னுதாரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

kadeeb-imam

நிகழ்வின் விசேட பேச்சாளராக உளவளத்துணை தொழில் வழிகாட்டல் உத்தியோகஸ்தர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.றிஸ்வி(அன்வாறி) அவர்கள் சிறப்புரையாற்றினார்.

மேற்படி பள்ளிவாயல்கள் கதீப்மார்,இமாம்கள் சம்மேளனத்தின் 2017 புதிய தலைவராக மௌலவி ஏ.எல்.ஆதம்லெப்பை (பலாஹி), செயலாளராக மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), பொருளாளராக அல்ஹாபிழ் மௌலவி என்.எல்.எம்.றகீப் (பலாஹி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Published by

Leave a comment