“கடந்த காலத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு இப்போது நாங்கள் மேலதிகமாக செலவுசெய்யக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது”- சிப்லி

– எம் எச் எம் அன்வர்

Shiblyகாத்தான்குடி: கடந்த காலத்தில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் செய்த வேலைக்கு இப்போது நாங்கள் மேலதிகமாக செலவுசெய்யக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபைக்கு திண்மக்கழிவகற்றல் திட்டத்தினை மேலும் இலகுவாக்கும் நோக்கில் இரண்டு ட்ரக்டர்கள் வழங்கும் நிகழ்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் இவ்வாறு தெரிவித்தார்.

நகர சபை செயலாளர் எம் எஸ் எம் ஸபி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

Shibly

காத்தான்குடி நகர சபையில் கடந்த காலத்தில் நிருவகித்த ஒன்பது நகர சபை உறுப்பினர்கள் மேற்கொண்ட திட்டமிடப்படாத வேலைத்திட்டத்தினால் பல வடிகாண்களின் மூடிகள் சேதமடைந்துளள்ளன இதனை நாங்கள் தற்போது சீர்செய்து வருகின்றோம். உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இன்றி நிருவாக சபையுடன் இணைந்து பல சேவைகளை தற்போது செய்து வருகின்றோம்.

img_6466

காத்தான்குடி நகர சபைக்கு இரண்டு ட்ரக்டர்கள் இங்கு வழங்கப்பட்டமைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

பாகுபாடின்றி மக்கள் தேவையை உணர்ந்து சேவை செய்துவருகின்ற கிழக்கு மாகாண முதமைச்சரின் விஷேட கண்காணிப்பின் கீழ் கொடுவாமடு பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற குப்பை மீள் சுழற்சி திட்டத்தினை மேற்கொள்வதையிட்டும் பாராட்டுத் தெரிவிக்கின்றேன் இத்திட்டமானது இப்பகுதி குப்பை பிரச்சினையை தீர்க்க முடியுமான ஒன்றாகும்.

இவ்வாறு தனதுரையில் தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வுக்கு
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் மற்றும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் எம்.சலீம், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும் கிழக்கு முதலமைச்சரின் செயலாளர் ஏ.எல்.அஸீஸ் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Published by

Leave a comment