எதற்காக கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தினை விமர்சிக்க வேண்டும்?

– ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

Oddamawady 2016ம் ஆண்டு வெளியாகிய GCE உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஓட்டமாவடி எஸ்.எம்.டி ஹாஜியார் வீதியில் வசிக்கும் சாதாரன குடும்பத்தைச்சேர்;ந்த இல்யால் பாத்திமா அறூஸா எனும் மாணவி தொழிநுற்ப பிரிவு பரீட்சையில் தோற்றி மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும் அகில இலங்கை ரீதியில் 3ம் இடத்தினையும் பெற்று சாதனை படைத்த விடயமானது தேசியம் அறிந்த விடயம் என்பது சகல தரப்பினருக்கும் தெளிவானதாகும்.

இதனை அறிந்த அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி குறித்த தினத்தன்று அம்மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அம் மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு புதிய LAPTOP (மடி கணிணி) ஒன்றையும் வழங்கி வைத்து அம் மாணவிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். அந்த விடயமானது சமூக வலைத்தள ஊடகங்களில் புகைப்படமாகவும் பிரசுரிகப்பட்டிருந்தது.

அது மட்டுமல்லாமல் நாட்டில் உள்ள அரச, தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் குறித்த மாணவியின் வீட்டுக்கு சென்று மாணவியினதும் அவருடைய பெற்றோரினதும் கருத்துக்களை காணொளியாக்கி தங்களது பிரதான செய்திகளில் ஒளிபரப்பு செய்திருந்தது. அது மட்டுமல்லாமல் கிழக்கு முதலமைசர் அல்-ஹாபிழ் நசீர் அஹமட் கூட குறித்த மாணவியின் வீட்டுக்கு சென்று வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் சேர்ந்து அவர்களினுடைய அனுமதியுடன் புகைப்படம் எடுத்து முதலமைச்சரின் உத்தியோக பூர்வ முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளது முக்கிய விடயமாகும்..

அத்தோடு நேற்று வெளியான அரச தினசரி பத்திரிகையான தினகரன் பத்திரிகையில் கூட முன்பக்க செய்தியாக குறித்த மாணவியின் புகைப்படம் அவருடைய அனுமதியுடன் செய்தியாக பிரசுரிக்கப்படிருந்தது தேசியம் அறிந்த விடயமாகும்.

ஆனால் கல்குடவில் இயங்கும் இஸ்லமிய சமூக சிந்தனையுடனான நிறுவனமான அல்-கிம்மா நிறுவனத்தின பணிப்பாளர் ஹாரூன் அவர்கள் குறித்த மாணவியின் வீட்டுக்கு சென்று வழ்த்துக்களை தெரிவித்ததுடன் பெருமதிமிக்க மடி கணனியினை கையளித்தனை புகைப்படமாக பதிவேற்றம் செய்து செய்தியாக வெளியிட்டதனை எமது சகோதரர்கள் அல்-கிம்மா நிறுவனம் தனிப்பட்ட சுயலாபத்திற்காக பெண் பிள்ளையின் புகைப்படத்தினை பிரசுரித்துள்ளதாக விமர்சிப்பதானது தனிப்பட்ட முறையில் அல்-கிம்மா நிறுவனத்துடனும் அதன் பணிப்பாளர் ஹாரூன் ஸஹ்வியுடன் இருக்கும் காற்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதே எனது தனிப்பட்ட கருத்தாகும்.

Oddamawady

அல்-கிம்மா நிறுவானம் மடி கணணியினை குறித்த மாணவிக்கு பரிசாக வழங்குகின்றது என்றால் அது ஹாரூன் ஸஹ்வியினுடைய தனிபட்ட சொத்துக்களில் இருந்து கொள்வனது செய்யப்பட்டது அல்ல. மாறாக ஒரு சமூக நிறுவனத்திற்கு கணக்கு காட்ட வேண்டிய விடயமாகும். சவூதி அராபியாவில் இயங்கும் நிறுவனத்தின் கிளையே கல்குடாவில் இயங்கும் அல்-கிம்மா நிறுவனமாகும். அவர்கள் கல்குடா பிரதேசத்தில் மட்டுமல்லாது இன, , மத மொழி வேறுபாடிண்றி மேற்கொண்டு வரும் சமூக சேவைகள் எவராலும் மாற்றுக்கருத்தினை தெரிவிக்க முடியாத விடயமாகவே இருக்கும் அதே நேரத்தில் அவர்களினுடைய சேவைகளை ஊடக மயப்படுத்தி சமூகத்திற்கு தெரியபடுத்துவதும் காலத்தின் கட்டாய கடமையாகும்.

அந்த வகையிலேதான் கல்குடா அல்-கிம்மா நிறுவனமும், அதன் தலைமையும் குறித்த மாணவிக்கு மடி கணணியினை பரிசாக வழங்கி தங்களினுடைய சேவையின் நோக்கத்தினை வெளிப்படுத்தும் முகமாக அதனை சமூகத்திற்கும், தங்களினுடைய வெளி நாட்டு உயர் மட்டங்களுக்கும் குறித்த மாணவியினதும் அவருடைய பெற்றோர்களினதும் அனுமதியுடன் தெரியப்படுத்தியுள்ளது.
இதனை பொறுத்துக்கொள்ளாத கொண்ட சில முக நூல் நண்பர்கள் அல்-கிம்மா நிறுவனத்தோடும் அதன் தலைமையோடும் தனிப்பட்ட காற்புணர்ச்சியின் உச்ச கட்ட வெளிப்பாடாக உண்மைகு புறம்பான கருத்துக்களை அவர்களுடைய முக நூல்களில் கொமன்ஸ்களாகவும், அவதூராகவும் அள்ளி வீசிக்கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறு அவர்கள் விமர்சிப்பது சரி என்றால் ஏன் அவர்கள் எமது நாட்டு செய்திகளில் குறித்த மாணவியின் கருத்துக்களை காணொளியாக வெளியிட்ட சக்தி தொலைக்காட்சி, வசந்தம் தொலைக்காட்சி, ரூபவாகினி தொலைக்காட்சி, சுயாதீன தொலைக்காட்சி, அரச தினகரன் தினசரி பத்திரிகை, முதலமைச்சரின் முக நூலில் பதிவேற்றப்பட்ட விடயம் போன்றவைகளை விமர்சிக்கவில்லை என்பதுதான் எனது முக்கிய கேளிவியாக இருக்கின்றது.

காய்க்கின்ற மரத்திற்கே கல்லடி என்ற விடயம் சாலப் பொறுந்தும் என இவ்வாறு காற்புனர்ச்சி கொண்டு சுய சிந்தனை இல்லாமல் எல்லாவற்றினையும் விமர்சிப்பதுதான் தங்களின் திறமை என நினைத்துக்கொண்டு விமர்சிக்கும் முக நூல் நண்பர்களுக்கு நான் கூற வேண்டிய எனது கருத்தாகவும், கற்றுக்கொள்ள வேண்டிய விடயமாகவும் என்பதனை சுட்டிக்காட்ட விருப்புகின்றேன்.

Published by

Leave a comment